Monday, December 26, 2011

மரண தண்டனை ஒழிப்போம்! மனித நேயம் காப்போம் !!

மனித நாகரிகம் அதன் உச்சத்தைத் தொட்டிருப்பதாகக் கூறப்படும் இந்தக் காலத்தில், இந்தியாவில் இன்னும் நாம் மரண தண்டனையை நீட்டித்துக் கொண்டிருப்பது - மானுடத்தைப் போற்றும் சர்வதேச மனித உரிமையாளர்களின் முன் நமக்கு தலைகுனிவை ஏற்படுத்துவதாகும். எனவே,   மரண தண்டனைக்கு எதிராக நமது எதிர்ப்பைப் பதிவு செய்வது என்பது வரலாற்றுக் கடமையாகும்.

நிரபராதித் தமிழர்கள் பேரறிவாளன்,சாந்தன்,முருகன் ஆகியோரை தூக்கு மேடையிலிருந்து காப்பாற்றுவதற்காக பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளுடன் இணைந்து மரண தண்டனை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு தொடர்ந்து போராடி வருகிறது. சென்னையிலிருந்து வேலூரை நோக்கி இரு சக்கர வாகனப் பரப்புரைப் பயணம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம், தொடர் பட்டினிப் போராட்டம் நடத்திய மரண தண்டனை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு, அடுத்த கட்ட போராட்டமாக - இந்த மூவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக - பொதுமக்களின் கருத்துக்களை ஒருங்கிணைக்கும் வேலையைத் தொடங்கியுள்ளது.                 
மரண தண்டனைக்கு எதிரான மனநிலை உள்ளவர்கள், தூக்குத் தண்டனைச் சட்டம் அறவே ரத்து செய்யப்பட வேண்டும் என விரும்புகிறவர்கள், பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரின் உயிரும் காப்பாற்றப்பட வேண்டும் என விரும்புகிறவர்கள்  928 222 12 12  என்ற எண்ணிற்கு ஒரு  ஆளைளநன உயடட கொடுத்தால், உங்களின் அழைப்பு பதிவு செய்யப்படும். குறைந்தது 20 இலட்சம் பதிவுகளாவது இந்த எண்ணில் பதிவாகும்போது - எதிர்ப்புக் குரல்களின் வலிமையை மத்திய அரசுக்கும், உச்சநீதிமன்றத்துக்கும் உணர்த்த முடியும்.              
மானுடத்தின்பால், நீதியின்பால் அக்கறை உள்ள பத்திரிகையாளர்களும், ஊடகவியலாளர்களும் இதுகுறித்த தகவலை மக்களிடம் பரப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். மூன்று நிரபராதிகளின் உயிர்களைக் காப்பதற்கு 928 222 12 12 என்ற எண்ணிற்கு ஒரு ஆளைளநன உயடட கொடுக்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுப்போம். மரண தண்டனைக்கு எதிரான பொதுமக்களின் குரலை ஒருங்கிணைப்போம்.
மரண தண்டனை ஒழிப்போம்!  மனித நேயம் காப்போம் !!

இப்படிக்கு,

மரண தண்டனை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு.

No comments:

Post a Comment