பிரான்ஸில் தமிழீழத்தின் தேசியச் சின்னங்களைக் கொண்ட தபாலர் முத்திரைகள், பிரான்சு தபால் அமைச்சின் அங்கீகாரத்துடன் வெளிவந்துள்ளன.
இவற்றுள் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் படம் பதித்த தபால் முத்திரையும்,
தமிழீழத் தேசியக்கொடி, தேசியப்பூ, தேசிய விலங்கு, தேசியப் பறவை, தேசிய மரம் ஆகிய சின்னங்களைக் கொண்ட முத்திரைகளும் அடங்குகின்றன.
எம்மவர்கள் கடிதங்களையும் பொதிகளையும் அனுப்புவதற்கு இந்த முத்திரைகளைப் பயன்படுத்தலாம்.
இந்த முத்திரைகளைப் பயன்படுத்துவதன் மூலம் எமது சின்னங்களை உலகம் முழுவதும் சென்றடையவைத்து, தமிழினத்தின் பெருமையையும் வரலாற்றுச் சிறப்பையும் அழியாது காப்பது ஒவ்வொரு தமிழர்களினதும் வரலாற்றுக் கடமையாகும்.
நமது தேசம் ஒரு நாள் இந்த உலகத்தின் முன் தோற்றம் பெறும் என்பதை ஒவ்வொரு தமிழீழ குடி உரிமையாளர்களும் சிந்தித்து முடிவு எடுத்து உலக நாடுகளில் அகதியாகவோ அல்லது தற்கால நிலைமையின் காரணமாகவோ சென்றவர்களின் உணர்வுகளும் உதிரங்களும் இணைந்து பிரான்ஸ் நாட்டில் உள்ள எங்கள் உறவுகளுக்காக தமிழீழ தலைவனான எங்கள் அண்ணன் நிழல் படத்தையும் சின்னங்களையும் எங்கள் கார்த்திகை மலரையும் எமது தேசி கொடி என எங்கள் இலட்சினைகள் பதிந்த அடையாளங்களையும் முத்திரையாக வெளியிட்டமையானது தமிழீழ மக்கள் மத்தியில் போரானந்த அதிர்ச்சி தரும் ஒரு விடுதலை இன்பச்செய்திகளாக உள்ளது.
காலம் காலமாக உழைத்த உறவுகளின் உணர்வுகளின் உதிரம் ஒரு நாளும் சிவப்பு நிறம் நாளை மாற்று நிறமாகப்போய்விடாது அவை என்றோ ஒரு நாள் எங்கள் இலட்சினைகள் அத்தனையும் உலகத்தின் பதிவில் ஒப்பனையாக ஒளி மின்னும் என்பதிற்கு இது ஒரு உதாரணம் தான்.
தமிழீழ மக்கள் வாழும் தொப்புள் கொடி நாட்டில் தான் புலிச்சின்னம் அங்கிகரிக்கவேண்டும். ஆனால்..? அந்த நாடு தான் எங்களுக்கு அருகில் இருந்து துரோகத்தனமாக வைத்து கொன்று குவித்து மீதி இருக்கும் உறவுகளின் உடமைகளை சிதைக்கின்றது.
அகதியாக வந்தோம் அணைப்பதாகச்சொல்லியே தொப்பிழ் கொடி என சொல்லியே உயிரைப்பறிக்கும் தமிழகம் இன்று இந்த இலட்சினைப்படிந்த தமிழீழச்சின்னத்தைக்கவனிக்குமா..?அல்லது இதைப்பார்த்து திருந்துமா..?
ஒன்று மட்டும் உண்மை.
அன்னிய நாடாக இருந்தாலும் எங்களை அரவணைத்து எங்கள் உணர்வுகளை புரிந்து எமது தேசியத்தலைவன் அவருடன் எங்கள் இலட்சினைபதிவுகள் கொண்ட புலிச்சின்னம் மலர் விலங்கு என எங்கள் தமிழீழ வரை படம் என வெளியிட உதவிய நாட்டின் உள்ளம் போல் தமிழகம் இல்லை.
அவர்கள் எங்களை அகதி என்றாலும் புரிதல் கொண்டு நடக்கின்றர். எனவே எமது சின்னங்கள் தலைவர் படம் என வெளியிட்ட பிரான்ஸ் நாட்டு அதிபர் மற்றும் இதற்கு உதவி அத்தனை உறவுகளுக்கும் தமிழீழ சார்பில் மிகுந்த நன்றிகள்.
இத்தோடு நின்று விடாது இனித்தேவை எவையோ அதையும் வெளிப்படுத்தி துரோகியின் முன் காண்பித்து எமக்கு விடுதலை தர உதவ அன்புடன் அயராது உழைக்க அன்புடன் தமிழீழ தமிழீழ மக்கள் சார்பிலும் வேண்டுகின்றோம்.
எனவே அன்பு உறவுகளே எங்கள் முத்திரையை உங்கள் அன்புள்ள உறவுகளின் பொதிகள் அஞ்சல் செய்வதிற்கு பாவனைப்படுத்தி தகுந்த விலையில் செல்லுபடியாக்கி உயர் வருமானத்தையும் மதிப்பையும் கொடுக்க அன்புடன் வேண்டுகின்றோம்.
நன்றி பிரான்ஸ் தபால் முத்திரை அமைச்சு.
No comments:
Post a Comment