ஆறாத வடுவாக தமிழினத்தைப் பின்தொடர்ந்து வரும் மேற்படி முள்ளிவாய்க்கால் யுத்தம், தற்போது ஒரு இனந்தெரியாத, இலங்கை கண்டறியாத நோயைத் தமிழினத்துக்கு தந்து விட்டுச் சென்றுள்ளது.
அதாவது, வன்னி இறுதிப்போரின்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் சிக்குண்டிருந்த மக்களில் 90சத வீதமானவர்கள் இலங்கைக்கு இதுவரை அறிமுகமில்லாத மோசமான புதியவகை சுவாச நோயொன்றின் தாக்கத்திற்குள்ளாகியிருப்பதாக யாழ்.கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி எச்சரித்துள்ளார்.
இறுதி யுத்தத்தில் சிக்குண்டிருந்த மக்களிடையே மேற்கொண்டிருந்த ஆய்வில் இந்த அதிர்ச்சி முடிவு தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குடநாட்டிலுள்ள பத்திரிகையொன்றிற்கு அவர் வழங்கியுள்ள செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதில் மேலும் அவர் குறிப்பிட்டிருப்பதாவது,
இறுதிப்போரின்போது சனத்தொகை அடர்த்தியான பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான எறிகணை வீச்சுக்களால் இந்தப் பாதிப்பு மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.
எறிகணை வீச்சுக்களின் போதும் அவற்றின் வெடிப்பின்போதும் அதிலிருந்து கிளம்பும் மண் துகள்கள் மற்றும் நுண்ணிய வெடி மருந்து துகள்கள் ஆகியவற்றை சுவாசித்ததன் மூலம் இலட்சக்காணக்கான மக்கள் இந்த நோயினால் தாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த நோயின் தாக்கத்திற்குள்ளான மக்களின் உடலில் மணல் மற்றும் வெடிமருந்து துகள்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். யெழெ வுநஉhழெடழபல மூலம் இதனை யாரும் நேரில் அறிந்து உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் எனவும் மேலும் கூறினார்.
இந்தநோய் pneumono ultra micro scopic silico volcano coniosis என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றது. 45எழுத்துக்களைக் கொண்ட உலகத்தில் மிக நீளமான சொல்லாக இந்தநோயின் பெயர் உள்ளது.
இந்தநோயினால் பாதிக்கப்பட்டவர்களை புற்றுநோய் காசநோய் சுவாசஅலட்சி என்பன எளிதில் தாக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் இந்தநோயின் தாக்கம் மிக சிலரிலேயே உடனடியாக தெரியவந்துள்ளது.
எனினும் இந்தநோயின் தாக்கம் வெளியில் தெரியவர 20வருடங்கள் கூட எடுக்கலாம். ஏரிமலை அபாயம் உள்ள பகுதி மக்களையே இந்நோய் பெரும்பாலும் தாக்கியுள்ளதாகவும் எரிமலை வெடிப்பின்போது அதிலிருந்து வெளியாகும் தூசி மண்டலம் மற்றும் நுண்துகள்களை சுவாசிக்கும் மக்கள் இந்தநோயின் தாக்கத்திற்குள்ளாகியிருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டார்.
துரதிஸ்ர வசமாக இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிக்கியிருந்த மக்களில் சுமார் 90சதவீதமான மக்கள் இந்தநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கவலை தெரிவித்த வைத்தியக்கலாநிதி ஒரு எரிமலை வெடிப்புக்கு ஒப்பான அல்லது அதற்கு மேலான தாக்கத்தை முள்ளிவாய்காலில் மக்கள் எதிர் கொண்டிருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டார்.
இத்தகைய பாரியதொரு பாதிப்பை எமது மக்கள் எதிர்கொண்டிருப்பது குறித்து ஒரு சுவாசநோய் வைத்தியர் என்றவகையில் எச்சரிக்கவேண்டியது எனது கடமை.
இந்நோய் குறித்து அவசர ஆய்வுகளை மேற்கொண்டு இதன் தாக்கத்தை கட்டுப்படுத்த உலக சுகாதரா நிறுவனம் உள்ளிட்ட சுகாதார அமைப்புகள் முன்வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment