Tuesday, January 03, 2012

சிங்களப் புலனாய்வாளர்களது நோக்கத்தை தமிழ்த் தேசியவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்!

முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னரான காலப் பகுதியில் சிங்கள அரசு புலம்பெயர் தமிழர்கள் மீதான உளவியல் யுத்தத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது.

மிகப் பெரிய மனிதப் பேரவலத்தை நிகழ்த்தி, இலட்சக்கணக்கான தமிழாகளைக் கொன்று இறுதி யுத்தத்தில் பெற்ற போர்க் கள வெற்றியை நிரந்தரமாக்குவதற்கு எதையும் செய்வதற்கு சிங்கள தேசம் தயாராகவே உள்ளது. சிங்களப் பெரும் தேசியவாதத்தின் சிங்கள பௌத்த சிறிலங்கா என்ற மகாவம்சக் கனவுக்குத் தடையாக உள்ள புலம்பெயர் தமிழர்கள் மீது நேரடியான தாக்குதல்களைத் தொடுக்க முடியாத நிலையில் சிங்கள ஆட்சியாளர்கள் அவாகள்மீது தொடர் உளவியல் போரை நடாத்தி வருகின்றனர்.



விடுதலைப் புலிகளது புலம்பெயர் கட்டமைப்புக்களைச் சிதைப்பதில் ஆரம்பித்து, புலம்பெயர் கட்டமைப்புக்களை வழிநடாத்தும் பொறுப்பாளாகள் மீதான தாக்குதல்கள்வரை நிகழ்த்தி முடிக்கப்பட்டும் புலம்பெயர் தமிழர்களது தேசிய எழுச்சியினைச் சிதைத்துவிட சிங்களப் புலனாய்வாளாகளால் முடியவில்லை. இதனால், புலம்பெயர் தளங்களில் தமக்கு எதிராகச் செயற்படுபவர்களது பெயர்கள் திரட்டப்பட்டு, அவர்கள் மீதான தனிநபர் தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றது. அதற்கான தளங்களில் ஒன்றாக பிரான்சில் இருந்து இயங்கிவரும் வானொலி சிங்களப் புலனாய்வாளாகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்தகைய தாக்குதல் ஒன்று கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரான்சின் தமிழர் மனித உரிமை மையத்தின் செயலாளர் திரு. ச.வி. கிருபாகரன் அவாகள் மீதும் இந்த வானொலி மூலம் தொடுக்கப்பட்டது. ஐ.நா. மன்றத்தில் பெருத்த சம்பளத்துடன் தேசியத் தலைமையால் பணிக்கு நியமிக்கப்பட்டவர்களும் முள்ளிவாய்க்காலின் பின்னர் காணாமல் பொய்விட, இன்றுவரை ஈழத் தமிழர்களுக்கான நீதி கோரி ஐ.நா. மனித உரிமைகள் மையத்தில் தனித்த ஆளாக நின்று சிங்கள இனவாதத்திற்கு எதிராகப் போராடிவரும் கிருபாகரன் சிங்களப் புலனாய்வாளாகளால் இலக்கு வைக்கப்படுவது ஒன்றும் வியப்பான விடயம் அல்ல. ஆனால், அவர்மீதான சிங்கள தேசத்தின் இலக்கை எட்டுவதற்கு தமிழ் வானொலி ஒன்றே களம் அமைத்துக் கொடுத்திருப்பது அவமானகரமானது.

தமிழீழ விடுதலைப் போர்க் களத்தில் மனித உரிமைச் செயற்பாட்டாளர் திரு. கிருபாகரன் அவர்களது பங்கேற்பு மிக அற்புதமானது. அது தாயகம் நோக்கிய புலம்பெயர் தமிழர்களது போராட்டத்திற்கு மிகவும் அவசியமானது. இந்த நிலையில், அவர்மீதான தனிநபர் தாக்குதலை மேற்கொண்ட வானொலியின் நோக்கம் வெளிப்படையானது. சிங்கள தேசத்தின் தமிழின அழிப்புக்கு எதிராச் சிந்ப்பவர்களைத் தனி மனித தாக்குதல் மூலம் நிலை குலைய வைப்பதும், அதற்குள் அவரது சிந்தனைகளைச் சிறைபிடிப்பதும் சிங்களப் புலனாய்வின் நோக்கமாக உள்ளது.

எனவே, சிங்களப் புலனாய்வாளர்களது இந்த நோக்கத்திற்குள் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளாகள் வீழ்ந்துவிட்டால், அவர்களது நோக்கம் நிறைவேற்றப்பட்டதாகிவிடும். முதலில். நாம் அதிலிருந்து எம்மை விடுவித்துக்கொள்ள வேண்டும். ஒரு சில தமிழ்த் தேசிய எதிராளிகளால் செவிமடுக்கப்படும் வானொலி ஒன்றின் சேறடிப்புக்களை தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் கணக்கில் கொள்ளத் தேவையில்லை. காலத்திற்குக் காலம் விடுதலைப் புலிகளுக்கும், தமிழ்த் தேசியத்திற்கும் எதிரான தளங்கள் சிங்கள தேசத்தால் உருவாக்கப்படுவதும், அது மக்களால் புறக்கணிக்கப்படுவதும் தொடர் கதையாகத் தொடர்ந்தே வருகின்றது. இதில் வேதனைப் படுவதற்கு எதுவுமே இல்லை.

திரு. கிருபாகரன் போன்றவாகள் இதற்காகத் தங்களது நேரத்தை வீணடிக்காமல், காலம் இட்ட கட்டளைகளுடன் தமிழீழ விடுதலைக்கான பயணத்தில் இன்னமும் முனைப்போடு பயணிப்பதே சிங்களப் புலனாய்வாளர்களுக்குச் சரியான பதிலாக அமையும்.

- இசைப்பிரியா

No comments:

Post a Comment