Friday, April 05, 2013

இந்திய அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று எதிர்வரும் 09ம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

images[1]தமிழகத்தில் ஈழ ஆதரவு போராட்டம் வலுவடைந்துள்ள நிலையில், இந்திய அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று எதிர்வரும் 09ம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளது.
ஆறு பேர் கொண்ட இக்குழவில் இந்திய ஆளும் காங்கிரஸ் கட்சி, பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பகுஜன் சாமஜ் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்குகின்றனர்.
9ம் திகதி மாலை 6 மணியளவில் இக்குழுவினர் யாழ்.சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.
அத்தோடு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் இவர்கள் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

இதேவேளை இக்குழுவில் வழமையாக இடம்பெற்றிருக்கும் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் உள்ளடக்கப்படவில்லையென்றும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக மாறியுள்ள அ.தி.மு.க, தி.மு.க கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளடங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment