சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள சன் டி.வி. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்த விவரம்:
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சன் டி.வி. குழுமத்துக்கு சொந்தமான சன் ரைசர்ஸ் அணியும் இடம்பெற்றுள்ளது. இந்த அணியின் கேப்டனாக இலங்கை கிரிக்கெட் வீரர் சங்ககாரா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு பல்வேறு தமிழ் இயக்கங்களும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
குமார சங்ககாராவை அந்த அணியில் இருந்து நீக்க வேண்டும் என தமிழக கல்லூரி மாணவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினர் பட்டினப்பாக்கம்
எம்.ஆர்.சி.நகரில் உள்ள சன் டி.வி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி அந்த அமைப்பினர் பிரபாகரன் தலைமையில் வியாழக்கிழமை காலை சன் டி.வி. அலுவலகத்தை முற்றுகையிட புறப்பட்டு வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார், அந்த மாணவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 20 மாணவர்களும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

No comments:
Post a Comment