Monday, August 26, 2013

அரசின் போர்குற்றங்களைச் சொல்லுவோருக்கு அனுமதி: நவனீதம் பிள்ளை !


ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் பேரவையில் இலங்கை அவமதிக்கும் வகையில் தகவல்களை முன்வைத்த அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாட்டாளர்கள் குழுவினருக்கு, நாளை (25) இலங்கை செல்லும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் செய்த போர் குற்றங்கள் குறித்து நவநீதம்பிள்ளைக்கு தகவல்களை தெரிவிக்கவிருந்தவர்களுக்கு அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


இலங்கையில் உள்ள அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாட்டாளர்களும், மேற்குலக தூதரங்களுமே நவிப்பிள்ளை யாரைச் சந்திக்கவேண்டும் யாரைச் சந்திக்க கூடாது என்ற முடிவை எடுத்துள்ளதாக திவியன பத்திரிகை மேலும் குற்றஞ்சாட்டியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கில் உள்ள சிவில் அமைப்புகள், அரச விரோத ஊடக தரப்பினர் ஆகியோர் நவநீதம்பிள்ளையை சந்தித்து விடயங்களை முன்வைக்க தீர்மானித்துள்ளதாக திவயின மேலும் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

No comments:

Post a Comment