13 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதி அமைச்சர் பதவிகள் வழங்கப்பட உள்ளது.
குறி;த்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
இந்தப் பிரதி அமைச்சர்கள் பட்டியலில் மூன்று தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில்
நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு பின்னர் ஆளும் கட்சியில் இணைந்து
கொண்ட பீ. திகாம்பரம் மற்றும் ஜே. ஸ்ரீரங்கா மற்றும் கொழும்பு மாவட்டத்தில்
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு பின்னர் ஆளும் கட்சியில்
இணைந்து கொண்ட பிரபா கணேசன் ஆகியோர் இவ்வாறு பிரதி அமைச்சர் பதவிகளை
பெற்றுக்கொள்வுள்ளனர்.
எனினும், என்ன பிரதி அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்படும் என்ற தகவல்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.
மேலும், கடந்த காலங்களில் மாகாணசபைகளில்
அமைச்சுப் பதவிகளை வகித்து பின்னர் பாராளுமன்றிற்கு தெரிவான பாராளுமன்ற
உறுப்பினர்களுக்கும், மாவட்ட மட்டத்தில் அதி கூடிய விருப்பு வாக்குகளைப்
பெற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதி அமைச்சர் பதவிகள்
வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக ஜனாதிபதியின் புதல்வர் நாமல்
ராஜபக்ஷ, பிரபல முன்னாள் கிரிக்கட் வீரர் சனத் ஜயசூரிய, சர்ச்சைக்குரிய
தென் மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம, அருந்திக்க
பெர்னாண்டோ உள்ளிட்ட சிலருக்கு பிரதி அமைச்சர் பதவிகள் வழங்கப்பட உள்ளன.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் அளவில் பதவிப் பிரமாண நிகழ்வுகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment