Friday, October 11, 2013

போராட்டத்திற்கான தடை கண்டிக்கப்பட வேண்டியது – சர்வதேச மன்னிப்புச் சபை


ai_CI

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு நடைபெறும் காலத்தில் போராட்டங்கள் நடத்தப்படக் கூடாது என்ற உத்தரவு கண்டிக்கப்பட வேண்டியது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு நடைபெறும் முக்கிய நகரங்களில் போராட்டங்கள், பேரணிகள் மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
எனினும், இந்த உத்தரவானது அடக்குமுறையாகவே கருதப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை மூடி மறைக்கும் நோக்கில் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.
மாற்றுக் கொள்கையாளர்களை ஒடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த உத்தரவானது பொதுநலவாய நாடுகள் கொள்கைகள் கோட்பாடுகளுக்கு புறம்பானது என தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது பொதுநலவாய நாடுகள் அமர்வுகளை இலங்கையில் நடத்தக் கூடாது என்பதற்கான மற்றுமொரு சான்றாகும் என சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
உலக நாட்டுத் தலைவர்களிடம் மனித உரிமை மீறல்கள் பற்றிய தகவல்கள சென்று சேரக் கூடாது என்பதற்காகவே அரசாங்கம் இவ்வாறான தடைகளை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment