Friday, October 11, 2013

தேசிய தலைவர் கூட்டமைப்பை பற்றி என்ன சொன்னார் ?

 தமிழில் "அறம் பாடுவதுபோல" என்ற வார்த்தை ஒன்று உள்ளது. அதாவது சிலர் கூறுவது அப்படியே சரியாக இருக்கும். இல்லை என்றால் அதுவே பின்னர் ஒரு காலத்தில் நடக்கும். இதனை நாம் ஏன் கூறுகிறோம் என்று, புரியவில்லையா ? இலங்கையில் நடைபெறும் காமன்வெலத் மாநாட்டை கனடா புறக்கணித்துள்ளது. இந்தியா செல்வதா விடுவதா என்று யோசனையில் உள்ளது, செல்வோம் ஆனால் கடுமையான செய்தி ஒன்றை கூறிவிட்டு வருவோம் என்ற நிலையில் பிரித்தானியா உள்ளது. ஆனால் எமது முதலமைச்சர் விக்னேஸ்வரன், கனடா தனது முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று இந்தியா ருடே பத்திரிகைக்கு தெரிவித்து இருப்பதாக செய்திகள் வெளிவர ஆரம்பித்துள்ளது. அதாவது காமன் வெலத் மாநாட்டை வெளிநாடுகள் புறக்கணிக்க கூடாது என்பது ஐயா விக்கினேஸ்வரன் அவர்களின் கருத்தாக இருக்கிறது.

கீழ் உள்ள வீடியோவைப் பாருங்கள். அதில் எமது தேசிய தலைவர் தனக்கு பட்டதை மிகத் தெள்ளத் தெளிவாக கூறியுள்ளார். மாகாண சபை தேர்தலாக இருக்கட்டும், இல்லை என்றால் உள்ளூராட்சி சபை தேர்தலாக இருக்கட்டும், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அதனை ஒரு விடுதலைக்கான தேர்தல் போல மக்களிடம் காட்டுகிறார்கள். இது ஒரு பிழையான பாதை என்று அவர் அடித்து கூறியுள்ளார். சமீபத்தில் நடந்த வட மாகாண சபைத் தேர்தலிலும் இதுவே நடந்தது. இது ஒரு விடுதலையைப் பெற்று தரும் என்றும், மாவீரர் கனவுகள் நினைவாகும் என்றும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்தவர்களும் ஆதரவாளர்களும் தொண்டை கிழையக் கத்தினார்கள். பின்னர் விக்னேஸ்வரன், மகிந்தர் முன் பதவிப் பிரமாணம் எடுக்க மாட்டார் என்றார்கள் ! பின்னர் எடுப்பார் என்றாகள் !

இலங்கைக்குச் சென்ற , வேற்று நாட்டவரான நவிப்பிள்ளை அம்மையார் இலங்கையில் பாரதூரமான குற்றங்கள் நடைபெற்றது என்கிறார். நீதியான விசாரணை தேவை , அதுவும் சர்வதேச விசாரணை தேவை என்கிறார். ஆனால் கூட்டமைப்பில் உள்ளவர்களோ மகிந்தரை திருப்திப்படுத்த நினைக்கிறார்கள். ஒத்து ஊதும் அரசியல் தான் மேலது என்று நினைக்கிறார்கள். தேர்த்தல் காலங்களில் மட்டும் விடுதலை பற்றி பேசுவதும், போராளிகளைப் பற்றி பேசுவதும் இவர்கள் வழக்கமாக உள்ளது. பின்னர் சிங்களத்தை தாஜா பண்ணவே நாடகங்களை அரங்கேற்றி வருகிறார்கள். இராணுவத்தை வடக்கில் இருந்து விலக்குவேன் என்று இவர்கள் கூறுவது எவ்வாறு சாத்தியமாகும் ? இலங்கை இராணுவம் போர் குற்றம் புரியவில்லை என்று இவர்களே வக்காளத்து வாங்கிக்கொண்டு எவ்வாறு, இராணுவத்தை விலக்கி கொள்ள சர்வதேசத்திடம் முறையிட முடியும் ? தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள அனைவரும் தவறிழைத்தவர்கள் அல்ல. சம்பந்தரால் மட்டுமே தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. இன் நிலை மாறவேண்டும். அதனூடாகவே, ஏனையவர்கள் சுயமாக இயங்க முடியும்.
 <iframe width="640" height="360" src="//www.youtube.com/embed/FJY8muz4EfM?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe>
http://youtu.be/FJY8muz4EfM 

No comments:

Post a Comment