By
பெங்களூரு
First Published : 22 April 2014 04:05 AM IST
பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு
தேர்வுகளில் தேர்ச்சி பெற வைக்க மாணவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு
முறைகேட்டில் ஈடுபட்டதாக அந்தப் பல்கலைக்கழக ஆட்சிக் குழு முன்னாள்
உறுப்பினர் வேதமூர்த்தியை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு பல்கலைக்கழகத்தில் தேர்வு முறைகேடுகள் நடந்துவருவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு இருந்து வந்தது.
இந்த நிலையில், பல்கலைக்கழக மாணவர்கள் பலர் இதுதொடர்பாக அல்சூர் கேட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு தேர்வுகளில் தோல்வி அடைந்த மாணவர்களை அணுகி, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தி அந்த மாணவருக்கு தாராளமாக மதிப்பெண் வழங்கி தேர்ச்சி அடைய செய்ததுடன், ஒரு பாடத்துக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை மாணவர்களிடம் பணம் வசூல் செய்ததாக புகாரில் மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸார், கடந்த 12-ஆம் தேதி பல்கலைக்கழக ஊழியர்களான கங்காதரையா, சந்திரசேகரையா, பசவராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் திங்கள்கிழமை பெங்களூரு பல்கலைக்கழக ஆட்சிக் குழு முன்னாள் உறுப்பினர் வேதமூர்த்தியை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் அரசுக் கல்லூரி முதல்வரும், பேராசிரியருமான கோட்ரையாவிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment