Tuesday, April 22, 2014

காங்கிரஸ் அரசு அழுத்தம் கொடுத்திருந்தால், இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைத்திருக்கும் - என்கிறார் ராஜ்நாத் சிங்

புதுடெல்லியில் ஆட்சியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம், வெளிவிவகாரக் கொள்கையில் தோல்வி அடைந்து விட்டது என்று பாஜகவின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

விருதுநகரில், மதிமுக பொதுச்செயலர் வைகோவை ஆதரித்து பரப்புரை செய்த அவர், கூட்டமொன்றில் உரையாற்றும் போது,

“ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வெளியுறவுக் கொள்கையில் தோல்வி அடைந்து விட்டது.

அவர்கள் உரிய அழுத்தத்தைக் கொடுத்திருந்தால், இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைத்திருக்கும்.


ஆனால், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி உரிய முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.

பாஜக அரசு அமைந்தவுடன், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக தேசிய மீனவர் நல வாரியம் அமைத்து, அவர்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்போம்.

வைகோ நாடாளுமன்ற உறுப்பினராக வரும் போது, ஒரு சாதாரண உறுப்பினராக மட்டுமே இருக்கமாட்டார்.

மாறாக, அரசாங்கத்தில் முக்கியமான முடிவுகளை எடுக்கக்கூடிய இடத்தில் அவர் இருப்பார் என்பதை நான் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment