அவுஸ்ரேலியா
செல்ல முயன்ற போது, அந்தமான் கடலில் இந்தியக் கடலோரக் காவல்படையினரால்
கைது செய்யப்பட்ட 26 இலங்கைத் தமிழர்கள் இன்று இந்திய அரசாங்கத்தினால்
கொழும்புக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அந்தமான் காவல்துறையினரால்
இன்று காலை சென்னை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்ட இவர்கள், ஸ்பைஸ்
ஜெட் விமானம் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக
அவுஸ்ரேலியா சென்ற இவர்களின் படகு, இரண்டு நாட்களுக்கு முன்னர்.
அந்தமானுக்கு அப்பால் இந்தியக் கடலோரக் காவல்படையிடம் சிக்கியது.
அவுஸ்ரேலியாவுக்கு
வேலை தேடிச் செல்வதாகவும், அதற்காக தாம் இலட்சக்கணக்கில் பணம்
கொடுத்துள்ளதாகவும், ,பிடிபட்ட இலங்கைத் தமிழர்கள் விசாரணையின் போது
தெரிவித்துள்ளனர்.
எந்த ஆவணங்களும் இன்றி கைதுசெயப்பட்ட இவர்கள் அந்தமான் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதையடுத்தே இன்று சென்னை விமான நிலையம் வழியாக நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
எனினும்,
இலங்கைத் தமிழர்கள் பிடிபட்ட தகவலை இந்திய அரெசாங்கம் மறைத்து, அவர்களை
இரகசியமான முறையில் நாடுகடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. |
No comments:
Post a Comment