ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கை தொடர்பில் விசாரணை நடாத்த
விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமிக்க உள்ளார் என்று சிங்களப் பத்திரிகையொன்று
செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் வாரத்தில் இந்த விசாரணை ஆணைக்குழு
பணிகளை ஆரம்பிக்க உள்ளது. வீடியோ கொன்பிரன்ஸ் முறையின் ஊடாக வடக்கில் உள்ள
சாட்சியாளர்களிடம் தகவல்கள் திரட்டப்பட உள்ளது. இந்த ஆணைக்குழுவில் மூன்று
உறுப்பினர்கள் அங்கம் வகிக்க உள்ளனர். மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்
உள்ளிட்ட 60 பேர் அரசாங்கத்திற்கு எதிராக சாட்சியமளிக்க உள்ளதாகத்
தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, சாட்சியாளர்களின் சர்வதேச தொடர்புகளை துண்டிப்பதற்கு அரசாங்கம்
நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.நா ஆணைக்குழு விசாரணை
மூலம் படையினரையும் அரசியல்வாதிகளையும் குற்றவாளியாக்க
முயற்சிக்கப்படுவதாகவும், குற்றவாளியாக்கப்படும் அதிகாரிகள் வெளிநாட்டுக்கு
பயணம் செய்ய முடியாத வகையில் தடைகள் விதிக்கப்படக் கூடுமென சிங்களப்
பத்திரிகை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment