இலங்கையில் போர் குற்றங்கள் இடம்பெற்றதா என்பதை அறிய ஐ.நா மனித உரிமை
ஆணைக்குழு நடத்தும் விசாரணைகளில் சாட்சியமளிப்பவர்கள் அரச துரோகிகள் எனக்
கருத அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
அவ்வாறு சாட்சியங்களை வழங்கும் நபர்களில் தொலைபேசி மற்றும் தொலைபேசி
காணொளி வசதிகளை துண்டிக்கப்பட உள்ளதுடன் அரச இரகசிய சட்டத்தின் கீழ்
அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் அதில்
கூறப்பட்டுள்ளது.
மன்னார் ஆயர், வடக்கில் உள்ள அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாட்டாளர்க் மற்றும் புலிகளின் முன்னாள் ஆதரவாளர்கள் உட்பட 60 பேர் இலங்கைக்கு எதிராக சாட்சியம் வழங்க முன்வந்துள்ளதாக அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளது எனவும் திவயின குறிப்பிட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் உ த்தேச விசாரணைக்குழு இந்த வாரம் அடுத்த வாரம் நியமிக்கப்பட உள்ளது.
குறித்த சர்வதேச விசாரணைக்குழு ஜெனிவாவில் இருந்து தனது விசாரணைகளை மேற்கொள்ளும்.
மூன்று பேர் கொண்ட இந்த விசாரணைக்குழு, சர்வதேச தொலைபேசி வலைமைப்பின் ஊடாக இலங்கையை இணைத்து, இங்குள்ளவர்களிடம் காணொளி மூலம் சாட்சியங்களை பெற தீர்மானித்துள்ளது.
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இந்த விசாரணைக் குழுவினால், அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினரில் எவராவது போர் குற்றத்தில் ஈடுபட்டனர் என ஊர்ஜிதப்படுத்தினால், அவர்கள் வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்ள முடியாது போகும்.என தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment