Monday, April 14, 2014

பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, நடிகர் ரஜினி காந்தை அவரின் வீட்டுக்கு சென்று சந்தித்து பேசினார்

BJP Prime Ministerial candidate, Narendra Modi is likely to visit superstar Rajnikanth. File photos.Ahead of a tightly fought, multi-cornered contest in the Lok Sabha elections, the BJP’s prime ministerial candidate, Narendra Modi, has set up a meeting with actor Rajinikanth for Sunday, to tilt the scales in favour of the BJP-led National Democratic Alliance.
“Mr. Modi is likely to meet Rajinikanth here tomorrow,” BJP national general secretary P. Muralidhar Rao said at a press conference here on Saturday.
This singular statement has put the spotlight again on Mr. Rajinikanth, the superstar of the Tamil film world, who strolled into politics famously two decades ago. Frustrated with the traffic jams in front of his house at Poes Garden for hours during AIADMK general secretary Jayalalithaa’s first term in office as Chief Minister, he chose to walk to his house one day, leaving his car on the road.
Basking in the success of his blockbuster movie Basha, in which he played the role of a Mumbai underworld don-turned-a suave autodriver in Chennai, Mr. Rajinikanth gave wholehearted support to the DMK-Tamil Maanila Congress combine. The DMK-TMC coalition trounced the AIADMK in 1996.
Despite pressure from his fans to float a party, Mr. Rajinikanth confined himself to films.
Eight years later, in 2004, Mr. Rajinikanth said he would vote for the BJP in the Lok Sabha elections, but he did not extend support to any front. The BJP did not win even a single seat in the State. And, the superstar went back to political wilderness. Ahead of the 2009 Lok Sabha elections too, the BJP attempted to get Mr. Rajinikanth’s backing.

The party senior leader L.K. Advani, met him here in 2008, but could not win his confidence.
Even now, Mr. Rajinikanth was reluctant and kept refusing. But Mr. Modi was very particular to have at least a “friendly” meeting with Mr. Rajinikanth, sources in the BJP said.
With the release of his movie Kochadaiiyaan, directed by his daughter Soundarya Rajinikanth Ashwin, scheduled for May 9, the superstar is unlikely to make any political statement, say industry sources.

லோக்சபா தேர்தல் இன்னும் 10 நாளில் நடக்க உள்ள நிலையில், தமிழகத்தில், மோடி அலை பலமாக வீச துவங்கி உள்ளது. தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி, தமிழர் வழக்கப்படி, வேட்டி கட்டி, அசத்தல் தோற்றத்தில், நேற்று சென்னை வந்த, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, நடிகர் ரஜினி காந்தை அவரின் வீட்டுக்கு சென்று சந்தித்து பேசினார்.இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்த போது, ''மோடி ஒரு வலுவான தலைவர்; சிறந்த நிர்வாகி. அவர் வெற்றி பெற வாழ்த்துகள்,'' என, நடிகர் ரஜினி மனம் திறந்து பாராட்டினார்.

தமிழகத்தில், வரும் 24ல், லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இன்று தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், மோடி நேற்று பங்கேற்ற பிரமாண்ட பிரசார கூட்டத்திற்கு சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டது.இதில் பங்கேற்க, நேற்று மாலை, 5:50 மணிக்கு சென்னை வந்த மோடி, மாலை, 6:30 மணிஅளவில், போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் வீட்டுக்கு சென்றார். ரோஸ் கலரில் சட்டை, வேட்டி, கழுத்தில் அங்க வஸ்திரம் அணிந்தபடி, அசத்தல் தோற்றத்தில் மோடி காணப்பட்டார்.அவரை, வெள்ளை நிற வேட்டி, சட்டையில் இருந்த ரஜினி, அவர் மனைவி லதா, மகள்கள் சவுந்தர்யா, ஐஸ்வர்யா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.


50 நிமிடங்கள்

மோடியுடன் தமிழக, பா.ஜ., பொறுப்பாளர் முரளீதர் ராவ் உடனிருந்தார். தமிழக, பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய குழு உறுப்பினர் இல.கணேசன், தேர்தல் பொறுப்பாளர் மோகன்ராஜுலு ஆகியோரும் தனியாக வந்தனர்.ரஜினி வீட்டில், 50 நிமிடங்கள் மோடி இருந்தார்; சிற்றுண்டி அருந்தினார். இதன் பின், இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது, ரஜினி கூறியதாவது:நான் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது,
மோடி, வாரம்தோறும் என்னிடம் தொலைபேசியில் பேசி, என் உடல் நலத்தை விசாரித்து, என் மீது மிகுந்த அக்கறை காட்டினார்; நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.'நீங்கள் சென்னை வரும்போது, என் வீட்டுக்கு வர வேண்டும்; ஒரு டீயாவது சாப்பிட வேண்டும்' என, நான் அவரை கேட்டுக் கொண்டேன். அதற்கு, இன்று வாய்ப்பு கிடைத்தது. மோடி என் வீட்டுக்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.மோடி வலிமையான தலைவர்; சிறந்த நிர்வாகி. எதிர்காலத்தில், அவர் எண்ணங்கள் வெற்றி பெற என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு,ரஜினி கூறினார்.

புத்தாண்டு வாழ்த்துகள்:
இதைத் தொடர்ந்து பேசிய மோடி, ''தமிழக மக்களுக்கு, புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ரஜினிக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறினேன். அதற்காகவே அவரை சந்தித்தேன்,'' என்றார்.

இதன்பின், இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டனர். ரஜினி, அவர் மனைவி மற்றும் மகள்கள், மோடியை, வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தனர். ரஜினியை மோடி கவர்ந்தார் என்பதை விட, 'தமிழக அரசியலில் மோடி அலை முற்றிலும் இல்லை' என்பவர்கள் கருத்தை முறியடிக்கும் செயலாக, இந்த சந்திப்பு அமைந்துள்ளது.முக்கியத்துவம்கரூரில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, 'பா.ஜ., கூட்டணி கட்சிகளை, 'டிபாசிட்' இழக்க செய்ய வேண்டும்' என, கடுமையாக விமர்சனம் செய்தார். பா.ஜ.,வை அவர் நேரிடையாக விமர்சனம் செய்வது, இதுவே முதல் முறை.இதன் தொடர்ச்சியாக, சென்னையில் நேற்று மாலை நடந்த மோடி - ரஜினி சந்திப்பும், 'மோடி, வலுவான தலைவர்; அவரது எண்ணங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள். அவர் இங்கு வந்ததில் எனக்கு மகிழ்ச்சி' என, ரஜினி மனம் திறந்து பாராட்டி உள்ளதும், தமிழக அரசியலில் அதிக
முக்கியத்துவம் பெறுகிறது.

முன்னதாக, ரஜினி வீட்டில் நடந்த, 50 நிமிடசந்திப்பின் போது, ரஜினி யின் ஆதரவை, மோடி கோரியதாக கூறப்படுகிறது. தென் மாநிலங்களில், குறிப்பாகஆந்திராவிலும், தமிழகத்திலும், பா.ஜ., காலுான்றி வலுப்பட மோடி அதிக அக்கறை எடுத்து வருகிறார். அதனால், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன், சென்னை வண்டலுாரில் நடந்த கூட்டத்திற்கு வந்து பேசினார்

அவர்.தற்போது, பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் அறிமுக கூட்டமாக, சென்னை மீனம்பாக்கம் வந்து பேசும் போது, 'தமிழகத்தில் அ.தி.மு.க., - தி.மு.க., என்று மாறி மாறி ஓட்டு போடும் போக்கை மாற்றுவதுடன், மக்களுக்கு பணிபுரியும் நிர்வாகத்துடன் கூடிய ஆட்சி தேவை' என்பதை வலியுறுத்தினார்.தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அமரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அவரின் நேற்றைய பயணம் அமைந்தது.பா.ஜ.,வுக்கு என தனிப்பட்ட அரசியல் பலம் இல்லாத தமிழகத்தில், மாற்றத்தை ஏற்படுத்தி, தேர்தல் முடிவுகளில், அக்கட்சி கூட்டணிக்கு பலன் தரும் வகையில், இம்மாதம்16, 17ல் மீண்டும் வருகிறார் மோடி.

No comments:

Post a Comment