கர்நாடகத் தமிழர்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்று, முன்னாள் எம்.எல்.ஏ. பி.முனியப்பா தெரிவித்தார்.
பெங்களூருவில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் சதானந்த கெüடா, பாஜக தேசியச் செயலாளர் அனந்த்குமார் முன்னிலையில் பாஜகவில் இணைந்த முனியப்பா, செய்தியாளர்களிடம் கூறியது: கன்னட மொழியை தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும், தமிழர்களின் அன்பாலும், தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் மீது இருந்த பற்றாலும் அதிமுகவில் இணைந்து, அந்தக் கட்சியின் சார்பில் காந்திநகரில் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.
தற்போது அதிமுகவிலிருந்து நான் விலகியுள்ளேன். இதனிடையே, தமிழர்களின் நலனைக் காக்க பாஜகவில் இணைந்துள்ளேன். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரும், தமிழர்களும் எனது இரண்டு கண்கள் என்றார் அவர். நிகழ்ச்சியில் முன்னாள் துணை முதல்வர் ஆர்.அசோக், மத்திய மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பி.சி.மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

By
பெங்களூரு
First Published : 13 April 2014 05:37 AM IST
source:dinamani
No comments:
Post a Comment