Wednesday, April 23, 2014

தேவிகன் பயன்படுத்தியதாக கூறப்படும் வானை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்

News Serviceநெடுங்கேணி வெடிவைத்தகல் காட்டுப் பகுதியில் வைத்து இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட விடுதலை புலிகளின் விமானிகளில் ஒருவரும், அந்த அமைப்பை மீண்டும் இலங்கையில் உருவாக்க முன்னின்றவர் என்று பாதுகாப்பு தரப்பால் அடையாளப்படுத்தப்பட்டவருமான தேவிகன் பயன்படுத்தியதாக கூறப்படும் வானை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். யாழ். நல்லூர் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போது இந்த வான் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு,கொழும்பில் உள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு தலைமையகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

   பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களால் வழங்கப்பட்ட நிதி ஊடாக தேவிகனால் இந்த வான் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இராணுவத்தினரால் கொல்லப்படுவதற்கு முன்னர் இந்த வானை தேவிகன் பயன்படுத்தியதாக நம்பும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் அது தொடர்பிலான விரிவான விசாரணைகளையும் தொடர்ந்து மேற்கொள்கின்றனர்.

No comments:

Post a Comment