தமிழர்களுக்கு தோளோடு தோள் கொடுத்து சேவை செய்வேன் என்று பெங்களூரு மத்திய தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் அர்ஷத் தெரிவித்தார்.
பெங்களூருவில் திங்கள்கிழமை பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் தமிழர்களின் ஆதரவுக்கோரி அவர் பேசியது: மதசிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த நான், மொழிசிறுபான்மை சமுதாய மக்களான தமிழர்களின் ஆதரவுக்கோரி தமிழ்ச்சங்கத்திற்கு வந்திருக்கிறேன். சிறுபான்மையினர் சமுதாயத்தினருக்கு சமவாய்ப்பு, கண்ணியமான வாழ்க்கை, வளர்ச்சிக்கு ஊக்கம் கிடைக்க வேண்டும். மேலும்சிறுபான்மையினருக்கு பாதுகாப்பும், வளர்ச்சியில் வாய்ப்பும் தேவைப்படுகிறது. இதை வழங்கக்கூடிய ஒரேகட்சி காங்கிரஸ் என்பதை தமிழர்கள் நன்கறிவார்கள். மதம்,சாத,மொழி பேதமில்லாமல் அனைத்து தரப்பினரின் வளர்ச்சிக்கு உத்தரவாதம் தருவது காங்கிரஸ் மட்டுமே. தமிழர்களின் இஸ்லாமியர்களின் கலாசாரம் வெவ்வேறானவை அல்ல. தமிழர்களின் ஆதரவோடு மக்களவைக்கு செல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழர்களின் வளர்ச்சிக்கு தோளோடு தோள் கொடுத்து சேவை செய்வேன்.
கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு உரிய அரசியல் அங்கீகாரம் கிடைக்க பாடுபடுவேன். தமிழ் இளைஞர்கள் பலரிடம் நல்ல தலைமைப்பண்பு உள்ளது. அந்த திறமையை காங்கிரஸ் பயன்படுத்திக்கொள்ளும். அடுத்த சில ஆண்டுகளில் தமிழ் இளைஞர்கள் பலருக்கு அரசியல் வாய்ப்பை காங்கிரஸ் அளிக்கும். தமிழர்களின் இன்பத்திலும் துன்பத்திலும் நான் உடனிருப்பேன் என்றார் அவர்.

By
பெங்களூரு
First Published : 15 April 2014 03:13 AM IST
source:dinamani
No comments:
Post a Comment