Tuesday, April 15, 2014

எந்தகாலத்திலும் காங்கிரசையும் தமிழர்களையும் பிரிக்க முடியாது: உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ்

காங்கிரசையும் தமிழர்களையும் எந்த காலத்திலும் யாராலும் பிரிக்க முடியாது என்று மாநில உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்தார்.
பெங்களூருவில் திங்கள்கிழமை பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, பெங்களூரு மத்திய தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் அர்ஷத்திற்கு ஆதரவுக்கோரி அவர் பேசியது: 1983-ஆம் ஆண்டு முதல் தமிழர்களுடன் மிக நெருக்கமாக இருந்துவருகிறேன். 1985-இல் முதல்முறையாகபாரதிநகர் தொகுதியில் இருந்து வெற்றிபெற தமிழர்கள் தான் காரணம். அதுமுதல் எனது அரசியல் வாழ்க்கையின் பிரிக்கமுடியாத அங்கமாக தமிழர்கள் மாறிவிட்டனர். தமிழ்ச்சங்கம் அரசியல் சார்பற்றது. எந்த கட்சிக்கும் தனிப்பட்டமுறையில் ஆதரவு தராது. தமிழ்ச்சங்கத்திற்கும் எனக்கும் உள்ள சம்பந்தம்
அரசியல்சார்பானது அல்ல. மாறாக, தமிழர்கள் மீதான அன்பில்பாற்பட்டது.
பெங்களூருவில் முதல்முதலாக திருவள்ளுவர் சிலை அமைக்க அனுமதி பெற்றுதந்து, இடம் ஒதுக்கிதந்தது நான் தான். அதற்குகாரணமானது காங்கிரஸ் அரசு தான். அப்போது சிலை திறக்க உச்சநீதிமன்றத்தில் தடைபெற்றது பாஜகவின் பிரமிளாநேசர்கி என்பதை நாடறியும். கர்நாடகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்களின் வாக்குகளை பெறுவதற்காக திருவள்ளுவர் சிலை திறப்பை எடியூரப்பா பயன்படுத்திக்கொண்டார். திருவள்ளுவர் அரசியல்சார்பில்லாதவர். தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே சொந்தமானவர் திருவள்ளுவர். 21-ஆம் நூற்றாண்டில் நாம் எதிர்கொள்ளும்பிரச்னைகளுக்கு தீர்வுதரும் ஒரே நூல் திருக்குறள் என்பதை படித்தறிந்துள்ளேன்.
சாதி, மதம்,மொழி பேதமில்லாமல் அனைவரின் வளர்ச்சியிலும் காங்கிரஸ் அக்கறையோடு செயல்பட்டுவருகிறது. மொழிசிறுபான்மையினரின் நலன்காக்கும் காங்கிரசுக்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும். தமிழர்களையும் காங்கிரசையும் எந்தகாலத்திலும் யாராலும் பிரிக்க முடியாது. தமிழர்கள் மற்றும் தமிழ்ச்சங்கத்திற்கும் இடையே உறவை யாராலும் முறிக்க முடியாது என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் கே.எச்.முனியப்பா, அமைச்சர்கள் தினேஷ்குண்டுராவ், ரோஷன்பெய்க், எம்.எல்.சி. ஆர்.வி.வெங்கடேஷ், வேட்பாளர் ரிஸ்வான் அர்ஷத், தமிழ்ச்சங்கத்தலைவர் கோ.தாமோதரன், செயலாளர் வா.ஸ்ரீதரன், பொருளாளர் மு.சம்பத், காங்கிரஸ் தேசியபொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பிரகாசம், இளைஞர்பிரிவு நிர்வாகி ரகுதேவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
First Published : 15 April 2014 03:11 AM IST 
source:dinamani

No comments:

Post a Comment