கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில், சிறிலங்காப் படையினருடன் இணைந்து இந்தியப் படையினர் செயற்பட்டதாக, இந்திய உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனுத் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு நேரடியாகப் பதிலளிக்காத, பிரிகேடியர் ருவான் வணிகசூரிய,
“இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் உள்ள நெருக்கமான உறவை எப்போதும் உடைக்க முடியாது.
1948ம் ஆண்டு சிறிலங்காவும், 1947ம் ஆண்டு இந்தியாவும் சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து கட்டியெழுப்பப்பட்ட உறவு இது.
இருநாடுகளுக்கும் இடையிலான இந்த நெருக்கமான உறவுகள், அரசியல் மற்றும் இராணுவம் சார்ந்த துறைகளையும் உள்ளடக்கியுள்ளது.
இந்த உடன்பாட்டுக்கமைய, சிறிலங்கா இராணுவ அதிகாரிகளால், இந்தியாவில் பயிற்சிகளைப் பெறமுடியும்.
இந்திய அதிகாரிகள் சிறிலங்காவில் பயிற்சி பெற முடியும்.
இன்றும் கூட இந்திய அதிகாரிகளை நீங்கள் சிறிலங்காவில் பார்க்க முடியும்.
அதேவேளை, சிறிலங்கா அதிகாரிகள் இந்தியாவிலும் உள்ளனர்.
இந்த இணைப்பு தீவிரவாதத்துக்கு எதிரான மனிதாபிமானப் போரின் போதும் கூட துண்டிக்கப்படவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment