இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட பி.பி.சி உலக சேவையின் செய்தி வாசிப்பாளர்
ஜோர்ஜ் அழகையா புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
58 வயதான அழகையா நீண்ட காலமாக பிபிசி தொலைக்காட்சி சேவையில் செய்தி
வாசிப்பாளராக கடமையாற்றி வருகின்றார். புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள
அவர் விரைவில் செய்தி வாசிப்பினை நிறுத்திக் கொண்டு சிகிச்சைகளுக்காக
வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது. ஆபிரிக்க
விவகாரங்களில் சிறப்பு கவனம் செலுத்திய அவர், நெல்சன் மண்டலோ, டெஸ்மன் டுடு
மற்றும் ரொபர்ட் முகாபே போன்ற பல முக்கியஸ்தர்களை செவ்வி கண்டுள்ளார்.
2004ம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின் பின்னர் அழகையா இலங்கையில் தனது
பாட்டனாரின் வீட்டுக்கு பயணம் செய்திருந்தார். அழகையா பூரண குணமடைய இறைவனை
பிரார்த்திப்பதாக பிபிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment