By
பெங்களூரு,
பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசியது:
கடந்த 5 ஆண்டுகளாக மக்களவை உறுப்பினராக சிறப்பாக பணியாற்றியுள்ளேன். இந்தத் தொகுதியில் வசிக்கும் 7 லட்சம் தமிழர்களும் எனக்கு ஆதரவு அளித்துள்ளனர். தமிழர்களின் பல்வேறு பிரச்னைகளை தீர்த்து வைத்துள்ளேன்.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் தொடர்ந்து அரசியல் பணியாற்றுவதால், என்னையும் தமிழனாக, தங்கள் சகோதரனாக அவர்கள் ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
2009-ஆம் ஆண்டு, இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தேன்.
இலங்கை தமிழர்களின் பாதுகாப்பிற்கு பாஜக தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி இலங்கை தமிழர்களை பாதுகாப்பதில் தவறியுள்ளது. கடந்த 18 ஆண்டுகளாக பெங்களூருவில் மூடிக்கிடந்த திருவள்ளுவர் சிலையை பாஜக ஆட்சியில் அன்றைய முதல்வர் எடியூரப்பா திறந்துவைத்தார். அதில் எனக்கும் சிறிய பங்களிப்பும் உள்ளது.
தமிழர்கள் ஒற்றுமையாக செயல்பட்டு தங்கள் அரசியல் தலைமையை திடப்படுத்திக் கொள்ள வேண்டும். பெங்களூரு மத்திய தொகுதியில் வாழும் 7 லட்சம் தமிழர்களை நம்பியே இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறேன் என்றார் அவர்.
கூட்டத்தில் ரகு எம்.எல்.ஏ., மாமன்ற உறுப்பினர் தன்ராஜ், தமிழ்ச் சங்கத் தலைவர் கோ. தாமோதரன், துணைத் தலைவர் தி.கோ.தாமோதரன், செயலாளர் வா.ஸ்ரீதரன், முன்னாள் தலைவர் ரா.சு.மாறன், இந்து நாடார் சங்கத் தலைவர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment