கொழும்பில் நேற்று வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தில் நடத்திய சந்திப்பில், இந்தியத் தூதுவர் யஸ்வந்த் குமார் சின்கா இதனை தெரிவித்துள்ளார்.
“ஆயுதப் போரின் முடிவு எல்லா இலங்கையர்களும் ஏற்றுக் கொள்ளத் தக்க - ஒன்றுபட்ட சிறிலங்காவுக்குள் நிலையான அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதற்கான வாய்ப்பை அளித்துள்ளது என்பதே எமது கருத்து.
நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில், உண்மையான நல்லிணக்கத்தையும், மனிதஉரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளையும் சிறிலங்கா அரசாங்கத்திடம் வலியுறுத்தி வந்துள்ளோம்.
சிறுபான்மைத் தமிழர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட தன்னாட்சி உரிமைகளை சிறிலங்கா அரசாங்கம் வழங்க வேண்டும்.
தமிழ்ப் போராளிகள் தோற்கடிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளாகியுள்ள நிலையில், உண்மையான நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
2009ம் ஆண்டு முடிவுக்கு வந்த போரின் இறுதி மாதங்களில் ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் சிறிலங்காப் படைகளால் கொல்லப்பட்டது பற்றிய குற்றச்சாட்டுகள் குறித்து கொழும்பு விசாரணை நடத்த வேண்டும்.
அதிகாரப் பகிர்வு தொடர்பாக அர்த்தமுள்ள உறுதியான நகர்வுகளை சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளோம்.
சிறிலங்கா அரசாங்கம் உண்மையான இணக்கப்பாட்டின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து, செயற்படும் என்று நாம் நம்புகிறோம்.
முன்னாள் போர் வலயத்தில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள உயர்பாதுகாப்பு வலயங்களை குறைக்குமாறும் கொழும்பிடம் புதுடெல்லி கோரியுள்ளது.
போருக்குப் பின்னர், காணாமற்போயுள்ள ஆயிரக்கணக்கானவர்கள் பற்றி பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.
இவை உண்மையான நல்லிணக்க செயற்பாடுகளுக்குள் உள்ளடக்கப்பட வேண்டும்.
விடுதலைப் புலிகளை அழித்து சிறிலங்கா படைகள் வெற்றி பெற்று ஐந்து ஆண்டுகள் கடந்து விட்ட போதும், தேசிய நல்லிணக்கம் சிறிலங்கா மக்களை ஆட்கொள்ளவில்லை என்பது துரதிஸ்டமே.
சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் அடுத்தடுத்துக் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் சிறிலங்கா - இந்திய உறவுக்குப் பெரும் சவாலாக அமைந்தன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.source:PP
No comments:
Post a Comment