எதிர்க்கட்சிகள் ஜனநாயக ரீதியில் அரசாங்கத்தை கவிழ்க்காவிட்டால், மக்கள்
கிளர்ச்சி நடத்தி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நிலைமை ஏற்படும்
என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். உடவளவ
பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய அவர்,சில
நாடுகளில் இடம்பெற்ற கிளர்ச்சிகளைப் போன்று இலங்கையிலும் கிளர்ச்சிகள்
வெடிக்க வாய்ப்பு உண்டு.கடந்த கால அரசியல் தலைவர்களின் சேவைகளை தற்காலத்
தலைவர்கள் மறந்து விட்டனர்.பெருமளவிலான அரசியல்வாதிகள் பொருளாதார நன்மைகளை
அடிப்படையாகக் கொண்டே தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
எனது ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஊழல் மோசடிகளை தடுக்க பல்வேறு வழிகளில்
முயற்சிகளை செய்து வந்தேன். தற்போது அந்த நிலைமையில் மாற்றம்
ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment