மரண தண்டனை பெற்று மரண கொட்டடியில் உள்ள 3 தமிழர்களை மீட்பது தமிழகத்தின் கடமை, நமது உரிமை என்பதை உணர்ந்து, கட்சி, சாதி, மத இயக்க எல்லைகளைக் கடந்து, அடிமைத் தமிழகத்தின் விடுதலைக் குரலாக நம் கோரிக்கை ஒலிக்க வேண்டும்.
அதேபோல் 4 தமிழர்களின் 20 ஆண்டு சிறை வாழ்வின் துயரத்தை கொடுமையை எதிர்த்தும் 3 தமிழர்களின் மரணக் கொட்டடியிலிருந்து மீட்கவும் உறுதிமிக்க போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். 7 தமிழர்கள் விடுதலைக் காற்றை சுவாசிப்பதற்கும் நாம் வழிவகை செய்ய வேண்டும் என்பதே ஒவ்வொரு மனிதனின் கடமை. அதேபோல் ஒவ்வொரு தமிழனும் உண்மை உணர்வுடன் அவர்களோடு கைகோர்க்க வேண்டும்.
அதை நோக்கி நாம் தொடர்ந்து குரல் கொடுப் போம். ஒருங்கிணைவோம். மனித உரிமை நாள் திசம்பர் 10 அன்று சென்னையில் ஒன்றுகூடுவோம் உரிமையை நிலைநாட்டுவோம்
தமிழக சிறையில் நீண்ட நாள் சிறை வாழ்வை வாழ்ந்தும் போராடியும் வரும், நளினி, பேரறிவாளன், முருகன், சாந்தன், இராபட் பயாஸ், ரவிச்சந்திரன், செயக்குமார் ஆகியோரை விடுதலை செய்யக் கோரி இப்போது நாம் எழுப்புகிற குரல் இந்திய பேரரசுக்கு எதிராகவும் தமிழ்த் தேசியத்தின் விடுதலை குரலாக இது மாற வேண்டும்.
No comments:
Post a Comment