Friday, February 25, 2011

இதுவரை உறுதிமொழி எடுத்துக்கொள்ளாத நாடுகடந்த தமிழீழ அரசாங்க அவை உறுப்பினர்கட்கு வேண்டுகோள்! - அரசவைத்தலைவர் பொன்.பாலராஜன்

[ வெள்ளிக்கிழமை, 25 பெப்ரவரி 2011, 02:08.42 AM GMT ]
மதிப்பிற்குரிய நாடுகடந்த தமிழீழ அரசாங்க அவை உறுப்பினர்கட்கு! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பதவி ஏற்று 4 மாதங்கள் முடிவடைகின்றன. தமிழீழ தாயகத்தை மீள உருவாக்குவதில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பல பணிகளைத் துரிதமாகச் செய்ய வேண்டி இருக்கின்றது.  

எமக்கு முன்னால் இருக்கக் கூடிய பாரிய கடமைகளும் பொறுப்புக்களும் எமக்கு வாக்களித்து மக்கள் எமக்குத் தந்த பொறுப்புக்களும் எமக்கு முன்னே இருக்கின்றது.
நாடுகடந்த தமிழீழ அரசியல் யாப்பினை உருவாக்கி அதை நிறைவேற்றி அந்த யாப்பினை ஏற்று 68 உறுப்பினர்கள் உறுதி எடுத்துள்ளனர்.
இதில் மொத்த்ம் 102 உறுப்பினர் கொண்ட அவையில் 67% அங்கீகாரத்தினை இவ் யாப்பு பெற்றுள்ளது. பெரும்பான்மை மூன்றில் இரண்டு (2/3) பங்கினர் உறுதியெடுத்து கையெழுத்தும் இட்டுள்ளார்கள்.
இதுவரையில் 34 உறுப்பினர்கள் மாத்திரம் இவ் யாப்பினை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதனை மிகவும் மனவருத்தத்துடன் தெரியப் படுத்துகின்றேன்
.

2009 மே மாதம் பிலடெல்பியாவில் கூடி அரசியல் நிர்ணய சபையும் இடைக்கால நிர்வாக சபையும் உருவாக்கப்பட்ட்து. அந்த அரசியல் நிர்ணய சபைக்கு விசுவாசம் தெரிவித்து எங்களில் பலர் முன்னர் உறுதி மொழி எடுத்திருந்தோம்.
2010 ஒக்டோபரில் அரசியல் நிர்ணய சபை கலைக்கப்பட்டு முதல் யாப்பும் பாராளுமன்றமும் உருவாக்கப் பட்டு பிரதமர் அவைத் தலைவர், துணை அவைத்தலைவர், மந்திரிசபையினர் என்போர் தெரிவு செய்யப்பட்டனர்.
அரசியல் யாப்பு பாராளுமன்றத்தின் அச்சாணியாக இருப்பது ஒரு மக்களாட்சி விதி. பாராளுமன்றத்தினை உருவாக்கிய யாப்பினை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அந்த யாப்பினால் உருவாக்கப்பட்ட பிரதமர், அவைத்தலைவர், மந்திரி சபை என்பவற்றையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவாகின்றது.
ஒற்றுமை பற்றிப் பேசும் எங்களுக்கு அதைச் செயலில் காட்ட வாய்ப்பாக கருதிக் கொண்டு, இச் சந்தர்ப்பத்தில் செயற்படவேண்டும். கருத்து முரன்பாடுகளை பாரளுமன்றத்தில் பேசி, விவாதித்து முடிவு செய்யும் பணியில் நாங்கள் யாவரும் முனைப்புடன் ஈடுபடல் வேண்டும்.
அதற்கு ஏற்ப இதுவரை உறுதிமொழி எடுத்துக் கொள்ளாதவர்கள் தங்களது உறுதிமொழிப் பத்திரத்தைக் கையொப்பமிட்டு பதிவுத் தபால் மூலம்
Pon. Balarajan
Speaker of TGTE
886 Sheppard Avenue
Pickering, Ontario
L1V 1G6
CANADA

என்னும் விலாசத்திற்கு மார்ச் மாதம் 5ம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாகவும் அதன் பிரதியினை மின்னஞ்சல் மூலம் Pon.balarajan@tgte.org அல்லது Speaker@tgte.org என்னும் மின்ன்ஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கவும்.
இவ் வாக்குப் பத்திரங்கள் அவைத்தலைவருக்கு கிடைக்கவில்லை எனின் நீங்களாக உங்கள் நாடு கடந்த தமிழ்ழ அரசாங்கத்தின் பாராளுமன்றத்திலிருந்து விலகுவதாகக் கருத்திற் கொண்டு அப்பதவி வெற்றிடங்களை நிர்ப்புவதற்கான விபரங்கள் தேர்தல் ஆணையகத்திற்கு மார்ச் மாதம் 6ம் நாள் அனுப்பி வைக்கப்படும் என்பதனை பணிவாகத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
உங்கள் ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
இப்படிக்கு
அவைத்தலைவர்
நா.க.த.அ
பொன். பாலராஜன்.
இதுவரை உறுதிமொழி எடுத்துக் கொள்ளாதவர்கள்
Australia
Sanchayan, Kulasegaram
Sribalan, Seran
Shanmuganathakumar, Thuraisingam
Canada
Balan Ratnarajah
Esan Theivendran Kulasekaram
Mariampillai Anjalo Yogendran
Sureshananth Ratnabalan
Thiru S. Thiruchelvam
Vanitha Rajendram
France
Saravanamuthu Sasikumar
Sivaguru Balachandran
Tharmendran Krishanth
Germany
Nadarajah Thiruchelvam
Dr. Sandrapala Ganesaratnam
Mughunthan Indralingam
Paramu Ananthasingam
Rasiah Thanabalasundaram
Renuka Logeswaran
Vithiya Jeyasangar
Italy
Mylvaganam Baskaranarayanan
Denmark
Ponnampalam Maheswaran
Remmon Rajiv
Sukenthini Nirmalanathan
Norway
Jeyasri Balasubramaniam
Sivakaneshan Thilaiyampalam
Sivananthan Murali
Sweden
R.Sivaneshan
UK
Arththy Arumugam
Jeyavani Atchuthan
Karthikeshan Paramasivam
Maheswaran Sasithar
Senathirajah Jeyananthamoorthy
Shanmuganathan Kaviraj
Vasuky Somaskanda

No comments:

Post a Comment