[ வெள்ளிக்கிழமை, 25 பெப்ரவரி 2011, 02:25.54 AM GMT ]
விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளராக இருந்த தமிழ்ச்செல்வனின் மறைவு அந்த இயக்கத்துக்குப் பேரிழப்பாக அமைந்ததாக விமானப் படைத்தளபதி சீப் எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க சுட்டிக்காட்டுகின்றார்.
மிக விரைவில் விமானப்படைத்தளபதி பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ள அவர் கடந்த கால சேவை அனுபவங்கள் பற்றி கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் பல தலைவர்கள் நீண்ட காலமாக விமானப்படையினரால் இலக்கு வைக்கப்பட்டு தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வந்தனர். அவர்களில் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனும் உள்ளடங்கியிருந்தார்.
அவர் கிளிநொச்சியில் தங்கியிருக்கும் இடம் பற்றிய தகவல் 2008 நவம்பரில் துல்லியமான புலனாய்வுத் தகவல்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. அதனையடுத்து அவரது மறைவிடம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இலக்கு கடினமானதாக இருந்த போதிலும் கடைசியில் வெற்றி கிட்டியது.
அவரது மறைவு காரணமாக விடுதலைப்புலிகளின் தலைவர்கள் மத்தியில் ஒருவித அச்சம் தொற்றிக் கொண்டது. அவர்கள் வெளியில் நடமாடுவதைத் தவிர்த்து பங்கர்களுக்குள் முடங்கிக் கொண்டார்கள். அதன் காரணமாகவே இறுதிக்கட்ட போரில் விடுதலைப்புலிகளை தோற்கடிப்பது இலகுவாக்கப்பட்டது.
விடுதலைப் புலிகளுடனான மூன்று தசாப்த கால போரில் ஆனையிறவு வீழ்ச்சியே இராணுவத்தின் பாரிய தோல்வியாகும். அனுராதபுர விமானப்படைத்தளம் மீதான தாக்குதல் நாங்கள் எதிர்கொண்ட மிகப் பெரும் சேதமாகும் என்றும் அவர் தனது செவ்வியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment