[ வெள்ளிக்கிழமை, 25 பெப்ரவரி 2011, 04:42.05 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கையில் வாழும் முதலாம் தர மோசடிக்காரன் மற்றும் திருட்டுப் போ்வழி என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவங்ச அமரசிங்க குற்றம் சாட்டுகின்றார்.
வெறுமனே பகட்டுக்காக மாத்திரம் பெளத்த நம்பிக்கை வாதியாக தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும் மஹிந்த ராஜபக்ஷ பௌத்தத்தின் எந்தவொரு கொள்ளை, கோட்பாடுகளையும் கடைப்பிடிப்பதேயில்லை என்றும் சோமவங்ச அமரசிங்க குற்றம் சாட்டுகின்றார்.
நேற்று கம்பஹா மாவட்டத்தின் நிட்டம்புவையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தோ்தலுக்கான பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குற்றம் சாட்டியுள்ளார்.
மதுபானம், சூது, விபச்சாரம் ஆகிய அனாச்சாரங்களின் மூலம் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முனையும் ஜனாதிபதி மஹிந்தவைப் போன்ற மோசடிக்காரன், திருடன் இலங்கையில் வேறு யாரும் இல்லை.
இன்றைய நிலையில் இலங்கையில் பொருளாதார, கலாசார, அரசியல் என எந்தத்துறையிலும் பண்பாடு, நாகரிகம் என எதுவுமே இல்லை. அந்தளவுக்கு நாடு சீரழிந்து கெட்டிச் சுவராகியுள்ளது.
அபிவிருத்தி என்ற மாயையை மக்களுக்கு காட்டிக் கொண்டே அவர் மோசடியான முறையில் நாட்டை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார். அந்த வகையில் இலங்கையின் முன்னணி மோசடிக்காரத் திருடன் என்று மஹிந்த ராஜபக்ஷவை குறிப்பிடலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
No comments:
Post a Comment