[ வெள்ளிக்கிழமை, 25 பெப்ரவரி 2011, 04:29.11 AM GMT ]
விமானப்படையின் தற்போதைய தளபதி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்கவின் பதவிக் காலம் முடிவடைய உள்ளதால் அவருக்குப் பதிலாக ஹர்ஷ அபேவிக்கிரம
விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்படவுள்ளார்.

இலங்கை விமானப்படையின் இரண்டாம் தர அதிகாரியாக தமிழர் ஒருவர் இருந்து வந்த நிலையில் அவரே அடுத்த விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது.
ஆயினும் அவர் அண்மையில் ஓய்வுபெற்றுச் சென்றுள்ளதாக அறியப்படுகின்ற அதே நேரம், அவருக்கு அடுத்த நிலையில் இருந்த ஹர்ஷ அபேவிக்கிரம புதிய தளபதியாக நியமிக்கப்படவுள்ளார். அவர் முன்பு விமானப்படையின் போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றியிருந்ததுடன், அனர்த்த நிலைகளுக்கான இணைப்பாளராகவும் கடமையாற்றியிருந்தார்.
தற்போதைய விமானப்படைத் தளபதி ரொஷான் குணதிலக்கவின் பதவிக்காலம் இம்மாதம் 28ம் திகதி முடிவடையவுள்ள நிலையில், அதற்கடுத்த சில தினங்களில் விமானப்படையின் அறுபதாவது ஆண்டு நிறைவு விழா நடைபெற உள்ளது. அதன் காரணமாக பிரஸ்தாப விழா நிறைவடையும் வரை அவருக்கு சில நாட்கள் பதவி நீடிப்பு வழங்கப்படலாம் என்று தெரிய வருகின்றது.
விமானப்படைத் தளபதி ரொஷான் குணதிலக்க ஓய்வுபெற்றபின் அவர் தற்போது வகிக்கும் முப்படைகளின் பிரதான அதிகாரி என்ற பொறுப்பிலிருந்தும் அவர் விடுவிக்கப்படலாம் என்று தெரிய வருகின்றது. பெரும்பாலும் அப்பதவி இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவுக்கு வழங்கப்பட்டு அவருக்குப் பதிலாக இராணுவத் தளபதியாக மஹிந்த ஹத்துருசிங்க இராணுவத் தளபதியாக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புண்டு.
அவ்வாறு இராணுவத் தளபதிக்கு முப்படைகளின் பிரதான அதிகாரி பதவி கிட்டாத போது அந்த இடத்துக்கு கடற்படைத் தளபதி சோமதிலக்க திசாநாயக்க நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதே நேரம் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய அப்பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவரது இடத்துக்கு யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க மிக விரைவில் நியமிக்கப்படவுள்ளார் என்றும் ஊர்ஜிதமான தகவல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.

No comments:
Post a Comment