Tuesday, May 31, 2011

இலங்கை செய்த யுத்தக் குற்றம் அம்பலம்.செனல்4 காட்சிகள் உண்மையானவை


இலங்கையில் யுத்தக் குற்றம் இடம்பெற்றதற்கான ஆதாரத்தை காட்டும் வகையில் செனல்4 தொலைக்காட்சி வெளியிட்ட காட்சிகள் அனைத்தும் உண்மையானவை என ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்ஸிலின் இன்றைய கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான இன்று இலங்கை தொடர்பான அறிக்கை ஒன்றை நீதிக்குப் புறம்பான படுக்கொலைகள் மற்றும் சித்திரவதைகள் குறித்த ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் கிறிஸ்ரொப் ஹெய்ன்ஸ் அறிக்கை சமர்ப்பித்தார்.

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் சிறப்பு அறிக்கையாளராக நியமிக்கப்பட்ட பின்னர் இலங்கை தொடர்பாக இவர் சமர்பித்த முதலாவது அறிக்கை இதுவாகும்.

இந்த அறிக்கையிலேயே செனல்4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காணொளி மற்றும் அதுதொடர்பான தொழில்நுட்ப ஆய்வுத் தகவல்களும் உண்மை என கூறப்பட்டுள்ளது.

காணொளி ஊடாக இலங்கை இறுதிக் கட்ட யுத்தத்தின் போது போர் குற்றம் புரிந்துள்ளமை தெளிவாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செனல் 4 தொலைக்காட்சியின் குறித்த காணொளி பொய்யானது என இலங்கை அரசாங்கம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது.

No comments:

Post a Comment