Tuesday, May 31, 2011

பிரதான செய்திகள் நவதீம்பிள்ளையின் மீது கடுப்பில் இலங்கை அரசு!



அதிகாரபூர்வமற்ற நிபுணர் குழு அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு நவநீதம்பிள்ளை கருத்துக்களை வெளியிட்டுள்ளார். உறுதிப்படுத்தப்படாத தரவுகளின் அடிப்படையில் நிபுணர் குழு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அத்தகைய அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு கருத்துக்களை வெளியிடுவது ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளரின் தொழில்சார் தன்மையை பாதிக்கும்.


உள்நாட்டு விசாரணைகள் பூர்த்தியாகாத நிலையில், அந்த விசாரணைகளில் திருப்தியில்லை என்று நவநீதம்பிள்ளை முன்கூட்டியே கருத்து வெளியிட்டுள்ளார். நவநீதம்பிள்ளையின் விமர்சனப் பாங்கான இந்த நடவடிக்கை இலங்கையுடனான ஐ.நாவின் உறவுகளில் விரிசலை ஏற்படுத்தக் கூடும் என்று சேனுக செனவிரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment