Monday, May 30, 2011

மாறி மாறி ஒருவரை ஒருவர் ஆள்காட்டி தப்பித்துக்கொள்ளும் ஐ.நா அதிகாரிகள் !

30 May, 2011 by admin
ஐ.நா நிபுணர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக பல கேள்விகளைக் கேட்டு அதற்கான விளக்கங்களைப் பெற்றுக்கொள்வதிலும், அதிலும் குறிப்பாக இலங்கை விவகாரம் தொடர்பாக பல கேள்விகளைக் கேட்டு அடிக்கடி ஐ.நா அதிகாரிகளை சங்கடத்துக்கு உள்ளாக்கும் ஒரே ஒரு ஊடகமாக இருப்பது இன்ரர் சிட்டி பிரஸ்(ICP) ஆகும். இவ்வூடகம் சமீபத்தில் ஐ.நா நிபுணர்கள் குழு பரிந்துரைசெய்த அறிக்கையை ஏன் அமுல்படுத்த முடியாமல் உள்ளது என்ற கேள்வியை நேரடியா பான் கீ மூனிடம் தொடுத்திருந்தது. சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்பதனை மேற்கொண்டு நகர்த்த தன்னால் முடியாது என்றும் அது பொதுக் குழுதான் கூடி முடிவெடுக்கவேண்டும் என பான் கீ மூன் தெரிவித்திருந்தார்.

இதனை இவ்வூடகம் பொதுக் குழுவின் தலைவர் ஜோசெப்பிடம் கேட்டபோது, இவ்விடையம் குறித்து பான் கீ மூனே முடிவெடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். பான் கீ மூனிடம் கேட்டால் பொதுக் குழுவின் தலைவர் அல்லது பாதுகாப்பு கவுன்சிலே முடிவெடுக்கவேண்டும் என்று கூறுவதும், பொதுக் குழுவின் தலைவரிடம் கேட்டால் பான் கீ மூனே முடிவெடுக்கவேண்டும் என்று கூறுவதும் சிறுபிள்ளைத் தனமாக இருப்பதாக இன்ரர் சிட்டி பிரஸ் விசனம் தெரிவித்துள்ளது.

இலங்கை நிலை குறித்து ஐ.நா வின் நிலைப்பாட்டில் ஒரு தெளிவற்ற நிலை காணப்படுவதாக பலரும் எண்ணியுள்ளனர். ஆனால் அனைத்தையும் அறிந்தும் அறியாதது போல நடிப்பதும், ஒருவர் மாற்றி ஒருவர் அடுதவர் தான் செய்யவேண்டும் என ஆள் காட்டுவதுமாக உள்ளது. ஐ.நா நிபுணர்கள் குழு அறிக்கை வெளியாகி மாதக்கணக்காகியும் இது குறித்து இன்னமும் தீர்க்கமான எந்த ஒரு முடிவும் இதுவரை எடுக்கப்படவே இல்லை. தற்போது சுவிசில் நடைபெறவுள்ள மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா இலங்கை குறித்த கவனயீர்ப்பு ஒன்றை கொண்டுவர உள்ளதாக அறியப்படுகிறது. இருப்பினும் இது பிராந்திய மற்றும் வல்லரசுகளின் ஆதிக்கப் போட்டியால் வேண்டும் என்றே கையாளப்படும் ஒரு விடையமாகவே இருக்கிறது.

இலங்கை அரசுக்கு நெருக்கடிகைக் கொடுக்கவேண்டும் என்றால், இதுபோன்ற ஆயுதங்களை கையில் எடுப்பதும் இலங்கை சமரசம் பேசினால் சர்வதேச நாணய நிதியமூடாக பணத்தை வாரி வழங்குவதாகவும் அமெரிக்காவின் செயல்பாடுகள் அமைந்துள்ளது. இன அழிப்பு போர் குற்ற விசாரணை என்பதனைக் காட்டி இலங்கையை யார் அடி பணியவைப்பது என்பதே தற்போது நிலவும் சூழ் நிலையாக உள்ளது. இதனை நம்பி பல தமிழர்கள் ஏதோ போர்குற்ற மற்றும் இன அழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக நம்பிக்கொண்டும் உள்ளனர் என்பதே வருந்தத்தக்க விடையமாகும்.

No comments:

Post a Comment