Monday, May 30, 2011

கொட்டும் மழையிலும் உறுதிதளராது சிறிலங்கா கிரிக்கட் அணிக்கு எதிராக நடைபெற்ற எதிர்ப்புப் போராட்டம்

ன்று (28-05-11) பிரித்தானியவில் காடிப்  (Cardiff) எனுமிடத்தில் சிறிலங்கா கிரிக்கட் அணிக்கு எதிராக பிரித்தானிய தமிழ் இளையோரால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்புப் போராட்டம் காலை 10மணிக்கு விளையாட்டு மைதானத்திற்கு வெளியே நடைபெற்றது.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது மைதானத்திற்கு போட்டியைப் பார்வையிடச் சென்ற பார்வையாளர்களை மறித்து சிறிலங்கா அரசானது எம்மக்களுக்கு இழைத்த கொடுமைகள் இனவழிப்பு போர் மற்றும் இன்றும் விலங்குகள்போல் எம் மக்கள் அடைக்கப்பட்டிருப்பதும்; அடிமைகள் போல் நடத்தப்படுவது பற்றியும் சிறிலங்கா கிரிக்கட்அணியை தடைசெய்யவேண்டும் என்றும் சிறிலங்காவிற்கு செல்வதையும் பொருட்களை வாங்குவதையும் புறக்கணிக்கவேண்டும் என்றும் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தும் மக்களை மறித்து அவர்களுக்கு உண்மை நிலைமைகளை எடுத்துக் கூறியும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

விட்டு விட்டு மழைகூட அவர்களுக்கு தொந்தரவு செய்து கொண்டிருந்தபோதும் அனைவரும் இறுதிவரை தமது உரிமைக்காக குரல் கொடுத்தவண்ணம் இருந்தனர் இங்கு வந்த மக்களில் சிலர் இவற்றைக்கேட்கும் போது அதிர்ச்சியுற்று ஆவலாக அங்கு நடந்ததைக்கேட்டுத் தொரிந்து கொண்டதோடு இனிவரும் காலங்களில் தாமும் எம்மோடு இந்த புறக்கணிப்புகளில் ஈடுபடுவோம் எனவும் உறிதியளித்துச்சென்றது காலநிலையின் தொடர் இடர்களுக்கு மத்தியிலும் உரம்மேறியவர்களாக சோர்வின்றி அனைவரும் தமது பணியை செவ்வனே செய்துகொண்டிருந்தனர் ஒரு சில சிங்களவர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் முரண்பட்டபோதும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளையோர் தகுதிவாய்ந்த ஒரு பண்பாளர் போல் கையாண்டு வெற்றிகரமாக இந்த போராட்டத்தை நடாத்தினர்.

No comments:

Post a Comment