நாளை (ஜூன் 6) தனது விருப்பத்தை பான் கீ மூன் அறிவிப்பார் என ஐ.நா.
பாதுகாப்புச் சபை உறுப்பினரின் பேச்சாளர் இன்னர் பிரஸிற்குக் கூறியுள்ளார். திங்கட்கிழமை பகல் 11.30 மணியளவில் பான் கீ மூன் செய்தியாளர் மாநாட்டை நடத்தி அறிவிப்பை வெளியிடுவார் என அவரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காலையில் ஆசிய குழுவொன்று காலை விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்திருப்பதாகவும் பான் கீ மூன் அறிவிப்பை விடுப்பதற்காக இந்த விருந்துபசாரம் இடம்பெறவிருப்பதாகவும் மற்றொரு தூதுக்குழுவொன்று இன்னர் சிற்றி பிரஸிற்குத் தெரிவித்திருக்கிறது.
இதேவேளை, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஐ.நா.வின் உயர் தலைமைப் பதவியானது ஆசியாவிற்கே உரித்தானது என்று தனது நாடு உறுதியாக நம்புவதாக சீன இராஜ தந்திரி ஒருவர் இன்னர் சிற்றி பிரஸிற்குக் கூறியுள்ளார். அதேசமயம் சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த தலைமைப் பதவியும் அபிவிருத்தியடைந்துவரும் நாடொன்றிற்கே வழங்கப்படுமென அவர் கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தில் டொமினிக் ஸ்டோஸ்கானை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் தருணத்தில் பான் கீ மூன் அறிவிப்பை வெளியிடவுள்ளமை தொடர்பாக சிலர் ஆச்சரியமடைந்துள்ளனர். நாணய நிதியப் பதவி ஆசிய நாட்டவர் ஒருவருக்கு சென்றால் அதாவது சீனாவிலிருந்து ஒருவர் தெரிவு செய்யப்பட்டால் அந்த விடயமானது பான் கீ மூனின் இரண்டாவது பதவிக்கால எதிர்பார்ப்பைக் கேள்விக்குறியாக்கிவிடும். நாணய நிதியத்தின் நியமனப் பத்திரத்தாக்கல் நடவடிக்கைகள் ஜூன் 10 உடன் முடிவடைகின்றன. வெற்றி பெற்றவரின் பெயர் ஜூன் 30 இல் அல்லது அதற்கு முன்னர் அறிவிக்கப்பட வேண்டும்.
ஆனால், ஆசியர் ஒருவரை அப்பதவிக்கு நியமித்தால் பான் கீ மூன் இரண்டாவது பதவிக்காலத்தை நாடுவது கேள்விக்குறியாகிவிடும். பான் கீ மூன் இரண்டாவது பதவிக் காலம் தொடர்பாக அறிவிப்பை வெளியிட உள்ளதையிட்டு திடீரென ஏன் அவதிப்படுகிறார்கள் என்று தூதுக் குழு உறுப்பினர் ஒருவர் இன்னர் சிற்றி பிரஸிடம் கேட்டார். இங்கு (நியூயோர்க்) பான் கீ மூனை விமர்சிப்போர் கருத்துகளை சுற்றோட்டத்திற்கு விடுத்து வருகின்றனர்.
காஸாவுக்கான உணவுக் கப்பல்களுக்கு எதிராக அவர் துரிதமாக கதைத்தமை இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பான தனது நிபுணர் குழுத் தொடர்பாக அவர் எந்த செயற்பாடுமின்றியிருக்கின்றமை, மனித உரிமைகள் பற்றி பொதுப்படையாகப் பேசத் தவறியமை மனித உரிமைகள் தொடர்பாக அவர் தெரிவித்திருந்த கருத்துகள் என்பவற்றைத் துரிதமாக விமர்சகர்கள் சுற்றோட்டத்திற்கு விடுத்து வருகின்றனர். ஊடக சுதந்திரம், மனித உரிமைகள் தொடர்பான மறுசீரமை விடயங்களில் பொதுவாகவே போதியளவு கரிசனையை பான் கீ மூன் கொண்டிருக்கவில்லையென விமர்சிக்கப்படுகிறது. |
No comments:
Post a Comment