கொழும்பில் ஆளுங்கட்சி வெற்றிபெறும் பட்சத்தில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ பிரதமர் பதவியில் நியமிக்கப்படுவார் என்று ஜனாதிபதி வாக்களித்திருந்தார்.
அத்துடன் கொழும்பின் தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் பாதுகாப்புச் செயலாளரின் பொறுப்பிலேயே விடப்பட்டிருந்தது.
அவ்வாறான நிலையில் கொழும்பில் ஆளுங்கட்சி பெற்ற தோல்வியானது கோத்தாபயவின் பிரதமர் கனவைக் கலைத்துள்ளதாக மகிழ்ச்சியடைந்துள்ள அமைச்சர்கள், இனி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ராஜபக்ச குடும்பத்தின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றவாறாக கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment