Saturday, October 15, 2011

கனடாவில் சிறீலங்கா சுற்றுலா கண்காட்சி ரத்து!

ஓக்டோபர் மாதம் 16ம் 17ம் திகதிகளில் மிஸிஸாகா நகரில் உள்ள லிவிங் ஆர்ட்ஸ் மண்டபத்தில் நடக்கவிருந்த சிறீலங்கா அரசின் சுற்றுலா மற்றும் வர்த்தக கண்காட்சி காரணங்களின் அறிவிப்பின்றி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
இத் தகவலை மிஸிஸாகா நகர பொலீஸார் இன்று கனடிய தமிழர் பேரவைக்கு தெரிவித்தனர்.
எதுவித காரணங்களின் அறிவிப்புமின்றி மேற்படி கண்காட்சி ரத்து செய்யப்பட்டிருந்தாலும் கனடிய தமிழரின் ஒருங்கிணைந்த எதிர்ப்பும் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் புறக்கணிப்பு ஆர்ப்பாட்டமுமே முக்கிய காரணிகளாக இருக்கலாம் என அரசியல் ஆர்வலர்களால் கருத்துத் தெரிவிக்கப்பெற்றுள்ளது.
இக் கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஒக்டோபர் 16, 17ம் திகதிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ் மக்கள் கூடத்தேவையில்லை என கனடிய தமிழர் பேரவையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

எனினும் பாரதூரமான போர்க் குற்றங்களை புரிந்திருக்கும் சிறீலங்கா அரசின் நிகழ்ச்சிகளை மிஸிஸாகா நகரில் நடக்க அனுமதிக்க வேண்டாமென மிஸிஸாகா நகரபிதா மற்றும் அங்கத்தவர்களை கேட்டுக்கொள்ளும் இணைத்தளம் மூலமான மனுவில் கனடிய தமிழ் மக்கள் தொடர்ந்து கையெழுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்பெற்றுள்ளது.
இவ் மனுவானது எதிர்வரும் ஒக்டோபர் 17ம் திகதி மிஸிஸாகா நகரபிதாவின் காரியாலத்துக்கு சமர்ப்பிக்கப்படும்.

No comments:

Post a Comment