யாழ்.
நாவாந்துறையில் கிறீஸ் மனித சர்ச்சையைத் தொடர்ந்து இராணுவத்தினரால்
பொதுமக் கள் தாக்கப்பட்டனர் எனக் குற்றம் சுமத்தப்பட்டு தாக்கல்
செய்யப்பட்ட 61 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான வழக்கு விசாரணையை
உயர் நீதிமன்றம் டிசம்பர் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
பிரதம நீதியரசர் ஷிராணி ஏ. பண்டாரநாயக்க, நீதியரசர்கள் என். ஜி.
அமரதுங்க, கே. ஸ்ரீபவன் ஆகியோர் முன்னிலையில் இம் மனு விசாரணைக்கு
எடுத்துக் கொள்ளப்பட்டபோது அடுத்த விசாரணை டிசம்பர் 13 ஆம் திகதிக்கு
ஒத்திவைக்கப்பட்டது.
மனுதாரர்களில் ஒருவரான இருதயநாதன் வீனஸ் ரெஜி, தனது மனுவில்
பிரதிவாதிகளாக பாதுகாப்புச் செயலர் கோட் டாபய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி
லெப். ஜெனரல் ஜகத் ஜயசுரிய, பாதுகாப்புப் படைகளின் யாழ். கட்டளைத் தளபதி
மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத் துருசிங்க, பொலிஸ் மா அதிபர் என். இலங்கக்கோன்,
இராணு வத்தின் 51 ஆவது படையணித் தளபதி வெல்கம, 512 ஆவது பயைணியின் தளபதி
அஜித் பள்ளவெல, பிரதி பொலிமா அதிபர் நீல் தலுவத்த, சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகர், நெவில் பத்மதேவா, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.சி.ஏ.
பண்டார, யாழ். பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா, பெண் பொலிஸ்
கான்ஸ்டபிள் நதீகா மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரைக் குறிப்பிட்டுள்ளார்.
தனது அடிப்படை உரிமைகள் மட்டுமல்லாது மொழி உரிமையும் மீறப்பட்டுள்ளது
என்று ரெஜி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் வடக்கு, கிழக்
கிலும் ஏனைய பகுதிகளிலும் சாதாரண பிரஜைகளைக் காயப் படுத்திய, கொலை செய்த,
பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய பொதுவாக கிறீஸ் மனிதர்கள் என
அறியப்பட்ட இனந்தெரியாத நபர்களின் அச் சுறுத்தலை எதிர்கொண்ட பல சம்பவங்கள்
இடம்பெற்றமை குறித்து பரந்தளவு கரிசனைகள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment