வேண்டும் என்று கோரும் மனுவொன்று அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள அனைத்துலக மன்னிப்புச் சபையின் சிறிலங்கா விவகார நிபுணரான ஜிம் மக் டொனால்ட் என்பவரே இந்த மனுவை அனுப்பி வைத்துள்ளார்.
சிறிலங்காவில் போரின் போது விடுதலைப் புலிகளும், சிறிலங்கா அரசபடையினரும் போர்க்குற்றங்களையும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களையும் புரிந்திருப்பதாகவும் அவர் கூட்டிக்காட்டியுள்ளார்.
தமது படைகளால் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் காத்திரமான விசாரணைகளை மேற்கொள்ளத் தவறியுள்ளதாகவும் இந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதற்கு போரின் போது இருதரப்பினரும் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் மீறல்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அனைத்துலக விசாரணைகளுக்கு வெளிப்படையான ஆதரவை அமெரிக்கா வழங்க வேண்டும் என்றும், அதன்மூலம் சிறிலங்காவில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் மற்றும் மீறல்களுக்கு பொறுப்புக் கூறுவதற்கான நகர்வில் முதலடியை எடுத்து வைக்க முடியும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
ஒக்ரோபர் 29ம் நாளுக்கு முன்னர் ஐயாயிரம் பேரின் கையொப்பங்களுடன் இந்த மனுவை கையளித்தால், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெள்ளைமாளிகை தமக்கு அறிவித்துள்ளதாகவும் ஜிம் மக் டொனால்ட் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment