உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே அமோக வெற்றிப் பெற்றுள்ளது. வெற்றிபெற்ற மேயர்கள், பிரதிமேயர்கள், தலைவர்கள், உபதலைவர்கள் ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் நேற்று சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டனர்.
அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போதே ஜனாதிபதி மேற்கண்டாறு தெரிவித்து்ள்ளார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கொள்ளை, கப்பம் மற்றும் போதை மருந்து வகைகளின் விற்பனை போன்றவற்றை முற்றாக ஒழிக்க வேண்டும் என்பதுடன் அதற்கு சகலரது ஒத்துழைப்பும் அவசியம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
என்னிடம் யார் வந்து பாதுகாப்பு கோரினாலும் அதற்கான இறுதி முடிவை நானே எடுப்பேன். இது தொடர்பில் யாரும் என்னை விமர்சிக்க முடியாது. கொலன்னாவில் இடம்பெற்ற துரதிஷ்டவசமான சம்பவம் போன்று இனியும் நடக்கக்கூடாது என்றும் இதன்போது சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment