Saturday, October 01, 2011

சலிக்காமல் தொடர்ந்து பொய்யுரைக்கும் கோட்டாபய!


சர்வதேச நாடுகளால் இலங்கை மீது சுமத்தப்பட்டிருக்கும் போர்க்குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் பொய்யுரைத்துள்ளார்.

சிவிலியன்களைக் கொலை செய்வது அரசினதோ அல்லது இராணுவத்தினதோ கொள்கை அல்லவென்றும் அவர் வெட்கப்படாமல் கூறியுள்ளார்.


இது தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்திருப்பவை வருமாறு:

"சர்வதேச நாடுகளால் எம் தாய்நாட்டின் மீது சுமத்தப்பட்டிருக்கும் போர்க்குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை; அடிப்படையற்றவை; இறுதிச் சண்டையில் இடம்பெற்ற சிவிலியன்கள் உயிரிழப்பு மிகவும் குறைவானவை;

சிவிலியன்களைக் கொலை செய்வது அரசினதோ அல்லது இராணுவத்தினதோ கொள்கை அல்ல. இதற்கான ஆதாரங்களை இப்போது நாம் சேகரித்து வருகிறோம். இதனை நிரூபித்துக் காட்டுவோம். எமது ஆதாரங்கள் குறித்து விரைவில் சர்வதேசத்திற்கு அறிவிப்போம்" - என்றார்.

இதேவேளை, எதிர்வரும் 8 ஆம் திகதி தலைநகர் கொழும்பில் நடக்கவிருக்கும் மாநகரசபைத் தேர்தல் குறித்தும் கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்புச் செயலாளர் மாநகரசபைக்குத் தெரிவாகும் மேயர், பாதுகாப்பமைச்சுடன் ஒன்றுபட்டு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கக்கூடியவராக இருத்தல் வேண்டுமெனவும் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment