Thursday, December 22, 2011

தமிழ் பெண்களின் பாதுகாப்புக்கு இராணுவத்தால் ஆப்பு! நெருக்கடிகள் குழு அறிக்கை

இலங்கையில் பெண்களுக்கு குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழர்களுக்கு போருக்கு பிந்திய இன்றைய சூழலில் பாதுகாப்பு அற்ற நிலை தொடர்கின்றது என அறிக்கை இட்டு உள்ளது சர்வதேச நெருக்கடிகள் குழு.
சர்வதேச நெருக்கடிகள் குழுவின் பிந்திய அறிக்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இராணுவமயப்படுத்தப்பட்டு பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன என்றும் இந்நிலையில் பெரும்பான்மைச் சிங்கள இனத்தவர்களான இராணுவ இளைஞர்களால் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு தமிழ் யுவதிகள் ஆக்கப்படுகின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தமிழ் பெண்களின் பாதுகாப்பு சிங்கள இராணுவத்தினர் பாரிய அச்சுறுத்தல்களாக உள்ளனர் என்று இதில் கோடி காட்டப்பட்டு உள்ளது.
இலங்கைப் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக சர்வதேச அமைப்புக்கள் உரக்க குரல் கொடுத்து வருகின்ற போதிலும் இலங்கை அரசு இவ்விடயத்தில் நீடித்த அலட்சியப் போக்கையே கடைப்பிடிக்கின்றது என்று இவ்வறிக்கையில் சாடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment