கர்நாடகத்தில் வசித்துவரும் தமிழ் முஸ்லீம்கள்
மக்களவை தேர்தலில் கட்டாயம் வாக்களிக்குமாறு கர்நாடக மாநில தமிழ் முஸ்லீம்
நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சங்கத்தலைவர் எம்.ஏ.சித்திக் மற்றும் செயலாளர் எஸ்.ஏ.லியாகத் அலி வெளியிட்டுள்ள அறிக்கை: நமது நாட்டின் புதிய மத்திய அரசை தேர்ந்தெடுக்க கர்நாடகத்தில் ஏப்.17-ஆம் தேதி மக்களவை தேர்தல்நடைபெறவுள்ளது. வாக்களிப்பது நமது நாட்டின் தலைமையை தேர்ந்தெடுக்கும் உரிமையாகும். மேலும் தலைமைக்கு இன்னார் தகுதியானவர் என்பதை உறுதி செய்யவும் தேர்தல் பயன்படும். இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் வாக்களிப்பதும் மற்ற இஸ்லாமிய கடமைகளை போல அத்தியாவசியமானதாகும். வாக்களிப்பதற்காக நாம் செலவிடும் நேரம், அதற்காக ஏற்படும் சிரமங்கள் அனைத்திற்கும் இம்மையிலும் மறுமையிலும் நற்கூலிவழங்கப்படும் என்று மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.
கர்நாடகத்தில் 10 லட்சம் தமிழ் முஸ்லீம்கள் வசித்துவருகிறார்கள். இவர்கள் அனைவரும் மக்களவை தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டும்.
தமிழ் முஸ்லீம் நாள்குறிப்பு தயாராகிவருகிறது. இதில் தங்கள் பெயரை பதிவுசெய்ய 9448411794 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்றுஅதில் கூறப்பட்டுள்ளது.

By
பெங்களூரு
First Published : 15 April 2014 03:12 AM IST
source:dinamani
No comments:
Post a Comment