சிறிலங்காவின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் தொண்டு நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட, ஒரு தொகுதி பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொழும்பு பயணம் கடந்த வாரம் இறுதி நேரத்தில் கைவிடப்பட்டது.
அந்தப் பயணத்திட்டத்தை கைவிட்ட, நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரோன் ஹொட்சன், தாம் பயணத்தை கைவிட்டதற்கான காரணத்தை பிரித்தானிய ஊடகம் ஒன்றுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில் அவர், ஐ.நா விசாரணைக்கு ஒத்துழைக்க சிறிலங்கா அரசாங்கம் மறுத்ததால் தான், சிறிலங்கா பயணத்தை கைவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று தாம் நீண்டகாலமாக கோரி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். source:pp
No comments:
Post a Comment